ADDED : ஜூன் 09, 2024 02:47 AM
மந்தாரக்குப்பம், : கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் துாய்மை பணி நடந்து வருகிறது.
பள்ளிகள் நாளை (10ம் தேதி) திறக்கப்பட உள்ளது. அதை முன்னிட்டு, பள்ளிகளில் வகுப்பறை, சமையல் கூடம், கழிப்பறை உள்ளிட்டவைகளை துாய்மைப்படுத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மந்தாரக்குப்பம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அரசு பள்ளிகளில் துாய்மை பணிகள் நடந்து வருகிறது. பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்காத வகையில் வடிகால் சீரமைப்பு, குடிநீர் குழாய் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.