/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
ADDED : ஜூன் 09, 2024 02:48 AM
விருத்தாசலம், : விருத்தாசலம் அருகே பட்டபகலில் வீட்டின் பூட்டை உடைத்து, 2 சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மங்கலம்பேட்டை புது நெசவாளர் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி லட்சுமி, 45. கட்டட வேலை செய்து வருகிறார். நேற்று வீட்டின் முன்பக்க கதவை பூட்டிவிட்டு, வழக்கம்போல் வேலைக்கு சென்றார்.
இதனிடையே, லட்சுமியின் மகன் தினேஷ், 24. மதிய உணவு சாப்பிட வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, முன்பக்க கதவு உட்புறம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த தினேஷ், பின்புறம் சென்று பார்த்துள்ளார்.
அப்போது, பின்பக்க கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்த 2 சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
புகாரின்பேரில் மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும், டி.எஸ்.பி., ஸ்ரீதர் தலைமையிலான தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் ஹூப்பர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து, நகை மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் மங்கலம்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.