ADDED : ஜூலை 30, 2024 11:21 PM
விருத்தாசலம் : விருத்தாசலம், திட்டக்குடி தாலுகாக்களில் வி.ஏ.ஓ.,க்கள் பணியிட மாறுதல் குறித்து கலந்தாய்வு, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது.
ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத் தலைமை தாங்கினார். நேர்முக உதவியாளர் செல்வமணி வரவேற்றார். தாசில்தார்கள் உதயகுமார், அந்தோணிராஜ் பங்கேற்றனர். அதில், வி.ஏ.ஓ.,க்கள் தங்களுக்கு விருப்பமான கிராமங்கள் குறித்து பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து, இன்று வேப்பூர் தாலுகா வி.ஏ.ஓ.,க்களிடம் பணியிட மாறுதல் குறித்து கலந்தாய்வு நடக்கிறது.