/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கடலுார் தொகுதியில் காங்., விஷ்ணுபிரசாத் வெற்றி கடலுார் தொகுதியில் காங்., விஷ்ணுபிரசாத் வெற்றி
கடலுார் தொகுதியில் காங்., விஷ்ணுபிரசாத் வெற்றி
கடலுார் தொகுதியில் காங்., விஷ்ணுபிரசாத் வெற்றி
கடலுார் தொகுதியில் காங்., விஷ்ணுபிரசாத் வெற்றி
ADDED : ஜூன் 05, 2024 03:24 AM

கடலுாார்: கடலுார் லோக்சபா தொகுதியில் காங்., வேட்பாளர் விஷ்ணுபிரசாத், 1,85,896 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கடலுார் லோக்சபா தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் காங்., வேட்பாளர் விஷ்ணுபிரசாத், அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., சிவகொழுந்து, பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சான், நாம் தமிழர் கட்சி சார்பில் மணிவாசகன் உள்ளிட்ட 19 பேர் போட்டியிட்டனர்.
தேர்தலில், 9,86,878 ஓட்டுகள் பதிவான நிலையில், காங்., விஷ்ணுபிரசாத் 4,55,053, தே.மு.தி.க., சிவக்கொழுந்து 2,69,157, பா.ம.க., தங்கர்பச்சான் 2,05,244, நாம் தமிழர் கட்சி மணிவாசகன் 57,424 ஓட்டுகள் பெற்றனர்.
இதில், தே.மு.தி.க., வேட்பாளரை விட, 1,85,896 ஓட்டுகள் அதிகம் பெற்று காங்., விஷ்ணுபிரசாத் வெற்றி பெற்றார்.மேலும் தணிகைசெல்வன் (பகஜன் சமாஜ்) 3,971, அறிவுடைநம்பி (ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி) 6,500, மாயகிருஷ்ணன் (வீர தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர் கட்சி) 3,702, தங்கமுருகன் (தேசிய மக்கள் சக்தி கட்சி) 1,036 மற்றும் சுயேட்சைகள் ஆனந்தி 1696, ராஜ்மோகன் 660, ராஜசேகர் 712, சக்கரவர்த்தி, 1488, சீனிவாசன் 1363, வி.ஏ. தட்சிணாமூர்த்தி 3419, வி.தட்சிணாமூர்த்தி 1276, பாலாஜி 5440, பிச்சமுத்து 2186, பிரகாஷ் 700, ராமலிங்கம் 3216 ஒட்டுகள் பெற்றனர்.