/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அ.தி.மு.க., செயலருக்கு வெட்டு விருதையில் 4 பேர் கைது அ.தி.மு.க., செயலருக்கு வெட்டு விருதையில் 4 பேர் கைது
அ.தி.மு.க., செயலருக்கு வெட்டு விருதையில் 4 பேர் கைது
அ.தி.மு.க., செயலருக்கு வெட்டு விருதையில் 4 பேர் கைது
அ.தி.மு.க., செயலருக்கு வெட்டு விருதையில் 4 பேர் கைது
ADDED : ஜூன் 05, 2024 03:25 AM
விருத்தாசலம்,: விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டை அடுத்த கர்னத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு, 45. அ.தி.மு.க., கிளை செயலர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல், 46, என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த 2ம் தேதி அதே பகுதியில் உள்ள ேஹாட்டலில் ராமு டிபன் சாப்பிட்டு வெளியே வந்தார். அப்போது, சக்திவேல் மகன் சந்துரு என்கிற கோகுல், 20; தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ராமுவை தலை மற்றும் கையில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார்.
இதில், ராமுவின் கை விரல்கள் துண்டானது. இதுகுறித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, சந்துரு என்கிற கோகுல், தாய், ராதா, 37; சித்தப்பா வடிவேல், 38; மாமன் விக்னேஷ்வரன், 24, ஆகியோரை கைது செய்தனர்.