/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ எம் ஆர்.கே.,வுக்கு நினைவு மணிமண்டபம் முதல்வருக்கு காங்., நிர்வாகி கோரிக்கை எம் ஆர்.கே.,வுக்கு நினைவு மணிமண்டபம் முதல்வருக்கு காங்., நிர்வாகி கோரிக்கை
எம் ஆர்.கே.,வுக்கு நினைவு மணிமண்டபம் முதல்வருக்கு காங்., நிர்வாகி கோரிக்கை
எம் ஆர்.கே.,வுக்கு நினைவு மணிமண்டபம் முதல்வருக்கு காங்., நிர்வாகி கோரிக்கை
எம் ஆர்.கே.,வுக்கு நினைவு மணிமண்டபம் முதல்வருக்கு காங்., நிர்வாகி கோரிக்கை
ADDED : ஜூன் 15, 2024 05:41 AM

சிதம்பரம்: கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் - வன்னியர் ஒற்றுமைக்கு பாடுபட்டு மறைந்த பெருந்தலைவர் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்திக்கு நினைவு மணிமண்டபம் அமைக்க ஆதிதிராவிடர் மகாஜன சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, காங்., மாநில விவசாய அணி பொது செயலாளர், வினோபா முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
காட்டுமன்னார்கோயில், முட்டத்தை சேர்ந்த எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, இளம் வயதிலேயே, 1956-ல் தனது அரசியல் பயணத்தை துவங்கி முட்டம் ஊராட்சித் தலைவராக, 1961ல் பொறுப்பேற்றார்.
பின்னர் 1962 ல் காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்.எல்.ஏ., வாக தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் முதல்வர் கருனாநிதியின், பாராட்டையும், மதிப்பும் பெற்றவர்.
காட்டுமன்னார்கோவிலில் சாதிய கலவரங்கள் கடுமையாக இருந்த காலத்தில், ஆதிதிராவிட மக்களின் தலைவராக இருந்த, இளையபெருமாளோடு இணக்கமாக பழகி, அனைத்து சமூதாய மக்களுடனும், குறிப்பாக, ஆதிதிராவிடர்கள், வன்னியர்கள் ஒன்றுமையாக வாழ வழிவகை செய்யும் பொருட்டு, சமாதான கமிட்டி அமைத்தும், இரு தரப்பு சமூக மக்களிடத்தில் இணக்கமான சகோதரத்துவத்தை ஏற்படுத்தி செயல்பட்டவர்.
கடலூர் மாவட்டம் முழுவதும், நடைபயணம் மூலம் மக்களை சந்தித்து கட்சிப்பணியாற்றியவர்.
இறுதி வரை அனைத்து சமூக மக்களிடத்திலும், இணக்கமாக இருந்தவர் எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தி நினைவு தினமாக நவம்பர் 11ல் மோவூர், கலுங்கில், அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, அனைத்து சமூக மக்களும், 6 கி.மீ துாரம் நடைபயணம் செல்வது இன்றும் தொடர்கிறது ஆகவே எம்.ஆர் கிருஷ்ணமூர்த்தி, வாழ்ந்த காட்டுமன்னார்கோயில் பகுதியில் அவருக்கு ஒரு நினைவு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தார்.