/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வி.இ.டி., பள்ளியில் புதிய மாணவர்களுக்கு வரவேற்பு வி.இ.டி., பள்ளியில் புதிய மாணவர்களுக்கு வரவேற்பு
வி.இ.டி., பள்ளியில் புதிய மாணவர்களுக்கு வரவேற்பு
வி.இ.டி., பள்ளியில் புதிய மாணவர்களுக்கு வரவேற்பு
வி.இ.டி., பள்ளியில் புதிய மாணவர்களுக்கு வரவேற்பு
ADDED : ஜூன் 15, 2024 05:42 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த எருமனுார் வி.இ.டி., மேல்நிலை பள்ளியில், 2024 - 2025ம் ஆண்டிற்கான புதிய சேர்க்கை மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, பள்ளி குழுமத் தலைவர் பத்மாவதி சக்திவேல் தலைமை தாங்கினார். செயலர் விஜயலட்சுமி சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
பள்ளி தலைமை ஆசிரியர் எடில்பர்ட் பெலிக்ஸ் வரவேற்றார்.
பொருளாளர் மோகனா கொளஞ்சிநாதன் மாணவர்களை வாழ்த்தி பேசினார். இதில், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும், சர்வசமய வழிபாட்டுடன், நடப்பு கல்வியாண்டு, பள்ளியில் சேர்த்த மாணவர்களை, பேண்ட் வாத்திய இசையுடன் ஆசிரியர்கள் வரவேற்றனர். உதவி தலைமை ஆசிரியர் மோகன்ராஜ் நன்றி கூறினார்.