/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
ADDED : ஜூலை 29, 2024 05:17 AM

புவனகிரி : புவனகிரி அருகே சிமென்ட் சாலை அமைக்கும் பணியை தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புவனகிரி பேரூராட்சி 14 வது வார்டு பள்ளி வாசல் தெருவில் மாநில பகிர்வு நிதியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி துவங்கியது.
இப்பணிகளை அன்னை தெரசா நகர் பகுதியைச் சேர்ந்த சிலர் எங்கள் பகுதிக்கு வடிகால் வசதி ஏற்படுத்திவிட்டு பின்னர் இப்பகுதியில் சிமென்ட் சாலை அமைக்க வேண்டும் எனக் கூறி பணியை தடுத்து நிறுத்தினர்.
அப்போது அங்கு பணியில் இருந்த தொழில் நுட்ப உதவியாளர் மணி தங்கள் பகுதிக்கு தேவையான பணிகள் குறித்து பேரூராட்சியில் எழுதிக் கொடுங்கள் என்றார். அதற்குள் புவனகிரி போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதனால் நேற்று அப்பகுதியில் சாலை அமைக்கும் பணி தடைபட்டடது. இதுனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.