/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விருத்தாசலத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் விருத்தாசலத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்
விருத்தாசலத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்
விருத்தாசலத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்
விருத்தாசலத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்
ADDED : ஜூலை 29, 2024 05:17 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், ஸ்ரீ ஜெயின் ஜூவல்லரி, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை மற்றும் விருத்தாசலம் அரிமா சங்கம் சார்பில், 98வது இலவச கண் சிகிச்சை முகாம் நடந்து.
முகாமிற்கு, அரிமா சங்க தலைவர் சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார்.
ஸ்ரீ ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர்கள் அகர்சந்த், சுரேஷ்சந்த், ரமேஷ்சந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.டி.எஸ்.பி., ஆரோக்கியராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, முகாமை துவக்கி வைத்தார். அரிமா சங்க மாவட்ட ஆளுநர் சுபாஷ் சந்திரபோஸ், முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் செல்வகாந்தி, கணேஷ், முரளி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினர்.
நிகழ்ச்சியில், வாசுதேவன், கமல் கிஷோர் ஜெயின், செயலாளர்கள் முத்து நாராயணன், பொறியாளர் ரஞ்சித், பொருளாளர் ரகுராமன், கே.எஸ்.ஆர்., சுந்தரவடிவேல், வர்த்தகர் சங்கம் பலமலை, சேட்டு முகம்மது, உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், 500க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 320 பேர் மேல்சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.