/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கடலுாரில் மீன்கள் விலை சரிவு துறைமுகத்தில் அலைமோதிய மக்கள் கடலுாரில் மீன்கள் விலை சரிவு துறைமுகத்தில் அலைமோதிய மக்கள்
கடலுாரில் மீன்கள் விலை சரிவு துறைமுகத்தில் அலைமோதிய மக்கள்
கடலுாரில் மீன்கள் விலை சரிவு துறைமுகத்தில் அலைமோதிய மக்கள்
கடலுாரில் மீன்கள் விலை சரிவு துறைமுகத்தில் அலைமோதிய மக்கள்
ADDED : ஜூலை 29, 2024 05:20 AM

கடலுார் : ஆடி கிருத்திகையொட்டி கடலுாரில் மீன்கள் விலை சரிந்ததால் கூட்டம் அலைமோதியது.
கடலுார் துறைமுகத்தில் கடல் மீன்கள் வரத்து அதிகரித்துள்ளது. சாம்பாரை, சென்னாஓரை, சங்கரா, சீலா, ஊலா, வஞ்சிரம், வெள்ளகிலங்கம் என பல்வேறு ரக விற்கப்படுகிறது.
நாளை (இன்று) ஆடி கிருத்திகை என்பதால் கடல் மீன்களின் விலை கடுமையாக சரிந்துள்ளது. வழக்கமாக ஞாயிற்று கிழமை விடுமுறை நாள் என்பதால், கடலுார் மீன்பிடி துறைமுகத்தில், மீன்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகம் காணப்படும். நேற்று மீன்களின் விலை குறைந்துள்ளதால் மேலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
கடலுாரில் ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ரூ.800 விற்கப்பட்டன. சங்கரா ரூ.350, கிழங்கா மீன் ரூ.150, அட்டை மீன் ரூ.250, நெத்திலி ரூ.90, நண்டு ரூ.400 சீலா, வெள்ள கிலங்கம் வகை மீன்கள் ரூ.400, ஊலா ரூ.200, சாம்பாரை, சென்னா ஓரை மீன்கள் கிலோ ரூ.150 என விற்கப்பட்டன.
மீன்கள் விலை குறைந்ததால், பொதுமக்கள் மீன் வாங்க ஆர்வத்துடன் துறைமுகம், மீன் மார்க்கெட்டுகளில் குவிந்தனர். மக்கள் மீன்கள் வாங்க அலைமோதியதால் துறைமுகம் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.