/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பனை மரங்கள் சாய்ப்பு சப் கலெக்டரிடம் புகார் பனை மரங்கள் சாய்ப்பு சப் கலெக்டரிடம் புகார்
பனை மரங்கள் சாய்ப்பு சப் கலெக்டரிடம் புகார்
பனை மரங்கள் சாய்ப்பு சப் கலெக்டரிடம் புகார்
பனை மரங்கள் சாய்ப்பு சப் கலெக்டரிடம் புகார்
ADDED : ஜூலை 30, 2024 05:40 AM
சிதம்பரம்: வாய்க்கால் வெட்டும் பணியின்போது பனை மரங்கள் வெட்டி சாய்த்தது குறித்து சப் கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் அடுத்துள்ள கூடுவெளி கிராமத்தை சேர்ந்த விவசாயி பழனிவேல், சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில், எனக்கு சொந்தமான வடமூர் கிராமத்தில் இருக்கும் நிலத்தில், எங்களின் அனுமதியின்றி, வேளாண்மை பொறியியல் துறை மூலமாக வாய்க்கால் வெட்டுகிறேன், என்ற பெயலில் வயலில் உள்ள 75 ஆண்டுகள் பழமையான பனை மரங்களை வெட்டி சாய்த்துள்ளனர்.
சில பனை மரங்கள் விழும் நிலையில் உள்ளது. எனவே, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கேட்டுக்கொண்டுள்ளார்.