/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ இயற்கை வேளாண் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி இயற்கை வேளாண் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
இயற்கை வேளாண் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
இயற்கை வேளாண் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
இயற்கை வேளாண் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : ஜூலை 30, 2024 05:41 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில், இயற்கை வேளாண்மை பயிற்சி நடந்தது.
திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமை தாங்கினார். அதில், இயற்கை வேளாண்மை, மண்வளம் பாதுகாப்பு, இயற்கை வேளாண் முக்கியத்துவம், மண் வளம் மீட்டெடுப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஊட்டச்சத்து மேலாண்மை, மண் ஆரோக்கியம், மண் மற்றும் நீர் பரிசோதனை, மண் சேகரிப்பு முறைகள்
மற்றும் இடுபொருட்கள் தயாரிப்பு, இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, பாரம்பரிய விதைகள் தேர்வு, இயற்கை உற்பத்திக்கான சான்றிதழ், சந்தைப்படுத்தும் முறைகள் குறித்து தொழில்நுட்ப விஞ்ஞானிகள் எடுத்துரைத்தனர்.
இதில், நல்லுார் வட்டாரத்தை சேர்ந்த 30 மகளிர் சமுதாயப் பயிற்றுனர்கள், மாநில ஊரக வாழ்வாதார இயக்க பயனாளிகள் பங்கேற்றனர்.