ADDED : ஜூலை 30, 2024 05:40 AM

கடலுார்: கடலுார் ஜவான்ஸ்பவன் அருகில் இந்திய கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநகர செயலாளர் நாகராஜ் தலைமை தாங்கினார். பாக்கியம், முருகன், செல்வம், அரிகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் துரை, துணை செயலாளர் குளோப், கிருஷ்ணமூர்த்தி கண்டன உரையாற்றினர்.
மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். வீடுகளுக்கு மின் உபயோக அளவீடு பணியை மாதம் ஒரு முறை கணக்கீடு செய்ய வேண்டும். மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஜெயசீலன் நன்றி கூறினார்.