/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வகுப்பறை கட்டுமான பணி சேர்மன் துவக்கி வைப்பு வகுப்பறை கட்டுமான பணி சேர்மன் துவக்கி வைப்பு
வகுப்பறை கட்டுமான பணி சேர்மன் துவக்கி வைப்பு
வகுப்பறை கட்டுமான பணி சேர்மன் துவக்கி வைப்பு
வகுப்பறை கட்டுமான பணி சேர்மன் துவக்கி வைப்பு
ADDED : மார் 13, 2025 12:43 AM

பண்ருட்டி : பண்ருட்டி அருள் ஜோதி நகரில் 31 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்ட பூமி பூஜையை நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.
பண்ருட்டி நகராட்சி 1 வது வார்டு அருள் ஜோதி நகர் நகராட்சி துவக்கப்பள்ளியில், மாநில நிதி குழு ஆணையம் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் 31 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் தலைமை தாங்கி பணியை துவக்கி வைத்தார்.
நகராட்சி பொறியாளர் கண்ணன், உதவி பொறியாளர் கார்த்திகேயன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கதிர்காமன், நகர அவைத் தலைவர் ராஜா, கவுன்சிலர்கள் சண்முகவள்ளி பழனி, சாந்தி செந்தில், ரமேஷ், கிருஷ்ணராஜ், பணி ஆய்வாளர் வெங்கடேசன் கலந்து கொண்டனர்.