/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சுகாதார ஆய்வாளர் வீட்டில் திருட்டு: 3 பேர் கைது சுகாதார ஆய்வாளர் வீட்டில் திருட்டு: 3 பேர் கைது
சுகாதார ஆய்வாளர் வீட்டில் திருட்டு: 3 பேர் கைது
சுகாதார ஆய்வாளர் வீட்டில் திருட்டு: 3 பேர் கைது
சுகாதார ஆய்வாளர் வீட்டில் திருட்டு: 3 பேர் கைது
ADDED : ஜூன் 17, 2024 01:17 AM

திட்டக்குடி : திட்டக்குடி வதிஷ்டபுரத்தில், சுகாதார ஆய்வாளர் வீட்டில் திருடிய 17வயது சிறுவன் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த வதிஷ்டபுரத்தை சேர்ந்தவர் சங்கர், 41; சுகாதாரஆய்வாளர். இவர், கடந்த 12ம் தேதி, வேலைக்கு சென்றுவிட்டு, மதியம் வீட்டிற்கு சாப்பிடவந்தார்.
அப்போது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நான்கரை சவரன் நகைகள் திருடுபோனது தெரிந்தது.
புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். விசாரணையில், திட்டக்குடி வதிஷ்டபுரத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் ராகவன்,19; பொன்னுசாமி நகரை சேர்ந்த சுந்தரம் மகன் விக்னேஷ், 27; மற்றும் 17வயது சிறுவன் ஆகியோர் சங்கரின் வீட்டில் திருடியது தெரிந்தது.
அதையடுத்து, மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 10 கிராம் நகை பறிமுதல் செய்யப்பட்டது.