/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கூடுதல் வகுப்பறை திறப்பு அமைச்சர், எம்.பி., பங்கேற்பு கூடுதல் வகுப்பறை திறப்பு அமைச்சர், எம்.பி., பங்கேற்பு
கூடுதல் வகுப்பறை திறப்பு அமைச்சர், எம்.பி., பங்கேற்பு
கூடுதல் வகுப்பறை திறப்பு அமைச்சர், எம்.பி., பங்கேற்பு
கூடுதல் வகுப்பறை திறப்பு அமைச்சர், எம்.பி., பங்கேற்பு
ADDED : ஜூலை 20, 2024 05:32 AM

திட்டக்குடி; திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 84.72 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட வகுப்பறை கட்டடத்தை அமைச்சர் கணேசன் திறந்துவைத்தார்.
திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் நான்கு வகுப்பறை கட்டடம் 84.72 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் கட்டடங்களை திறந்து வைத்தார்.
தொடர்ந்து அமைச்சர் கணேசன், திட்டக்குடியில் பள்ளியின் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். விஷ்ணுபிரசாத் எம்.பி., தலைமையாசிரியர் ஜெய்சங்கர் மற்றும் அரசு அலுவலர்கள், தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மாணவர்கள் காத்திருப்பு
நிகழ்ச்சிக்காக, காலை 10:00 மணி முதலே மாணவர்கள் பள்ளி மைதானத்தில் அமர வைக்கப்பட்டிருந்த நிலையில் நிகழ்ச்சி முடிய 12:00 மணி ஆனதால், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மாணவர்கள் வெயிலில் அமர வைக்கப்பட்டிருந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
தொடர்ந்து கூடலுார், கொடிக்களம், மருதத்துார் உள்ளிட்ட கிராமங்களில் ராயல் என்பீல்டு நிறுவனம் சார்பில், சமூக பொறுப்பு நிதி திட்டத்தில் ஒரு கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பள்ளி வகுப்பறை கட்டடங்களை அமைச்சர் கணேசன் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளும் மூன்று மணி நேரம் தாமதம் ஆனதால் காலை முதலே அமைச்சரின் வருகைக்காக காத்திருந்த அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.