/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சாட்டையடி வாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் சாட்டையடி வாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
சாட்டையடி வாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
சாட்டையடி வாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
சாட்டையடி வாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED : ஜூலை 20, 2024 05:31 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் திரவுபதி யம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் பக்தர்கள் சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விருத்தாசலம் சாத்துக்கூடல் சாலை, ஆலமரத்து திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த மாதம் காப்புக்கட்டும் நிகழ்வுடன் துவங்கியது.
தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. வேத வியாசர் பிறப்பு, கர்ணன், தர்மர், கிருஷ்ணர் பிறப்பு, அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நடந்தன.
முக்கிய நிகழ்வாக நேற்று தீமிதி உற்சவத்தையொட்டி, மணிமுக்தாற்றில் இருந்து மாலை 4:00 மணிக்கு மேல், சக்தி கரகம் எடுத்து வரப்பட்டு, பக்தர்கள் தீமிதித்தனர். தொடர்ந்து, கோவில் வளாகத்தில் சாட்டையடி வாங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர்.