அஞ்சலகங்களில் ஆதார் சிறப்பு முகாம்
அஞ்சலகங்களில் ஆதார் சிறப்பு முகாம்
அஞ்சலகங்களில் ஆதார் சிறப்பு முகாம்
ADDED : ஜூன் 08, 2024 05:37 AM
கடலுார் : கடலுார் கோட்ட அஞ்சலகங்களில், வரும் ஜூலை 5ம் தேதி வரை ஆதார் பதிவு மற்றும் திருத்தம் சிறப்பு முகாம் நடக்கிறது.
கடலுார் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் கணேஷ் செய்திக்குறிப்பில், கடலுார் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. கடலுார் அஞ்சல் கோட்டத்தில் உள்ள கடலுார், சிதம்பரம் தலைமை அலுவலகம், 36 துணை அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் கடந்த 5ம் தேதி துவங்கியது. ஜூலை 5 வரை நடக்கிறது. பொதுமக்கள் பயன்பெறலாம் என, தெரிவித்துள்ளார்.