/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சன்னியாசிப்பேட்டையில் வாரச்சந்தை ஊராட்சி தலைவர் பெருமிதம் சன்னியாசிப்பேட்டையில் வாரச்சந்தை ஊராட்சி தலைவர் பெருமிதம்
சன்னியாசிப்பேட்டையில் வாரச்சந்தை ஊராட்சி தலைவர் பெருமிதம்
சன்னியாசிப்பேட்டையில் வாரச்சந்தை ஊராட்சி தலைவர் பெருமிதம்
சன்னியாசிப்பேட்டையில் வாரச்சந்தை ஊராட்சி தலைவர் பெருமிதம்
ADDED : ஜூன் 08, 2024 05:38 AM

நடுவீரப்பட்டு : சன்னியாசிப்பேட்டையில் வாரச்சந்தை அடுத்த மாதம் முதல் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஊராட்சி தலைவர் முத்துக்குமார் தெரிவித்தார்.
பண்ருட்டி அடுத்த அண்ணாகிராம ஒன்றியத்திற்குட்பட்டது சன்னியாசிப்பேட்டை ஊராட்சி. இதன் தலைவராக முத்துக்குமார் உள்ளார். இவர், தனது இரண்டரை ஆண்டு செயல்படுத்திய பணிகள் குறித்து கூறியது:
சன்னியாசிப்பேட்டை ஊராட்சியில் காந்திநகர் காலனி, பழைய காலனியில் குடிநீர் தேவைக்காக இரண்டு புதிய மேல்நிலைநீர்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. காந்திநகர் காலனியில் வடிகாலுடன் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஊராட்சி துவக்க பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம், சமையலறை கட்டடம் கட்டப்பட்டுள்ளது. வகுப்பறைகளை புனரமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் கருமகாரிய கொட்டகை, நூலக கட்டடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
பழைய காலனியில் தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஊராட்சியில் பிளாஸ்டிக் கழிவுகள்மூலம் தார்சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டு வருகிறது. கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில், வீடற்றவர்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பழுதடைந்த ஊராட்சி அலுவலகம், வி.ஏ.ஓ., அலுவலகங்கள் புதியதாக கட்டப்படுகிறது.
முக்கியமாக, 150 ஆண்டுகளுக்கு முன் இங்கு இருந்தது போல், அடுத்த மாதம் முதல் வாரச்சந்தை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், அண்ணாகிராம ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சி பிரதிநிதிகள், ஊராட்சி செயலர் ஒத்துழைப்புடன் சிறப்பாக பணி செய்து வருகிறேன்.
மேலும் இப்பகுதி மக்களின் நீண்டநாள் தேவைகளான சமுதாயக்கூடம், புதிய சுகாதார வளாக கட்டடம் ஆகியவைகளை மாவட்ட நிர்வாகம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளார்.