/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வீட்டினுக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு வீட்டினுக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
வீட்டினுக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
வீட்டினுக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
வீட்டினுக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
ADDED : ஜூன் 06, 2024 02:44 AM
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் வீட்டிற்குள் புகுந்த சாரை பாம்பு பிடிக்கப்பட்டது.
நெல்லிக்குப்பம் பங்களா தெருவை சேர்ந்தவர் மோகன். பூக்கடை வைத்துள்ளார். நேற்று காலை இவரது வீட்டிற்குள் 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு புகுந்தது. இதனால் அவரது குடும்பத்தினர் அலறி அடித்து வெளியே ஓடிவந்தனர். தகவலின்பேரில், வரக்கால்பட்டை சேர்ந்த பாம்பு பிடி வீரர் பிரபாகரன், நீண்ட நேரம் போராடி சாரை பாம்பை பிடித்து, காப்பு காட்டில் விட்டார்.