ADDED : ஜூன் 06, 2024 02:44 AM

நடுவீரப்பட்டு: பண்ருட்டி அடுத்த பாலுார் அருகே உள்ள சன்னியாசிப்பேட்டை ஊராட்சியில் உலகசுற்று சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். அண்ணாகிராம பி.டி.ஓ.,மீரா மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி அலுவலகம் அருகே திடலில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
நிகழ்ச்சியில் ஊரகவளர்ச்சி உதவி பொறியாளர் ஆர்த்தி, துணை பி.டி.ஓ.,தீபா,மேற்பார்வையாளர் தினகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.