/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரூ.4.98 கோடியில் சில்வர் பீச் மேம்பாட்டு பணி கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு ரூ.4.98 கோடியில் சில்வர் பீச் மேம்பாட்டு பணி கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு
ரூ.4.98 கோடியில் சில்வர் பீச் மேம்பாட்டு பணி கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு
ரூ.4.98 கோடியில் சில்வர் பீச் மேம்பாட்டு பணி கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு
ரூ.4.98 கோடியில் சில்வர் பீச் மேம்பாட்டு பணி கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு
ADDED : ஜூன் 06, 2024 02:49 AM

கடலுார்: கடலுார் சில்வர் பீச்சில் ரூ. 4.98 கோடியில் நடந்துவரும் பூங்கா மற்றும் பல்வேறு மேம்பாட்டு பணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.
கடலுாரில், சென்னை மெரினா கடற்கரைக்கு அடுத்து நீளமான கடற்கரையான சில்வர் பீச் உள்ளது. கடலுார் நகர மக்கள் பொழுது போக்கும் முக்கிய இடமாக இது உள்ளது. பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மகிழ்ச்சியாக பீச்சில் பொழுதை கழிக்க அதிகம் வருகின்றனர். அவர்கள் வசதிக்காக சிறுவர் விளையாட்டு பூங்கா உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்களை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
கடலுார் மாநகராட்சிக்குட்பட்ட சில்வர் பீச்சில், பல்வேறு திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக மூலதன மானிய திட்ட நிதியின் கீழ் 4.98 கோடி ரூபாய் மதிப்பில் பூங்கா உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இப்பணிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகள் நிலை குறித்து ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவிட்டார். மாநகராட்சி கமிஷனர் காந்திராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.