/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கடலுாரில் திடீர் மழை விவசாயிகள் மகிழ்ச்சி கடலுாரில் திடீர் மழை விவசாயிகள் மகிழ்ச்சி
கடலுாரில் திடீர் மழை விவசாயிகள் மகிழ்ச்சி
கடலுாரில் திடீர் மழை விவசாயிகள் மகிழ்ச்சி
கடலுாரில் திடீர் மழை விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஜூன் 06, 2024 02:48 AM
கடலுார்: கடலுாரில் நேற்று மாலை இடியுடன் கூடிய திடீர் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்து இருந்தது. ஆனால், கடலுாரில் நேற்று காலையில் இருந்து கடும் வெயில் அடித்தது. கடுமையான வெப்பத்தால் மக்கள் அவதியடைந்தனர். பிற்பகல் வெயில் குறைந்து கருமேக கூட்டம் சேர்ந்தது.
மாலையில் குளிர்ந்த காற்று வீசியது. சற்று நேரத்தில் இடி மின்னலுடன் மழை பெய்தது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.