/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கலெக்டர் அலுவலகத்தில் குப்பை குவியல் கலெக்டர் அலுவலகத்தில் குப்பை குவியல்
கலெக்டர் அலுவலகத்தில் குப்பை குவியல்
கலெக்டர் அலுவலகத்தில் குப்பை குவியல்
கலெக்டர் அலுவலகத்தில் குப்பை குவியல்
ADDED : ஜூன் 06, 2024 02:49 AM

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலக வளாகத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறைகளின் மாவட்ட தலைமை அலுவலகங்கள் உள்ளது. இங்கு தினந்தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், இங்குள்ள வாகன நிறுத்தம் பகுதியில் குப்பைகள் குவிந்து துர்நாற்றம் வீசி வருகிறது. மாவட்டத்தின் தலைமை அதிகாரியான கலெக்டர் இருக்கும் வளாகத்தில் குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பது பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, கலெக்டர் அலுவலகத்தில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.