/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சேத்தியாதோப்பு அருகே இரும்பு திருடிய 3 பேர் கைது சேத்தியாதோப்பு அருகே இரும்பு திருடிய 3 பேர் கைது
சேத்தியாதோப்பு அருகே இரும்பு திருடிய 3 பேர் கைது
சேத்தியாதோப்பு அருகே இரும்பு திருடிய 3 பேர் கைது
சேத்தியாதோப்பு அருகே இரும்பு திருடிய 3 பேர் கைது
ADDED : ஜூன் 03, 2024 05:25 AM

சேத்தியாத்தோப்பு, :சேத்தியாதோப்பு அடுத்த ஆணைவாரி பஸ் நிறுத்தம் அருகே கொல்லம் பட்டறையில் 40 கிலோ இரும்பு திருடிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த ஆணைவாரி நல்லதண்ணீர் குளத்தைச் சேர்ந்தவர் ராமு, 65; இவர் ஆணைவாரி பஸ்நிறுத்தம் அருகே கொல்லம் பட்டறை நடத்தி வருகின்றார்.
வழக்கம் போல் ராமு நேற்று முன்தினம் இரவு 8.00 மணிக்கு பட்டறையை மூடிவிட்டு சென்றவர் மறுநாள் அதிகாலை வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின் உள்ளே சென்று பார்த்தபோது இரும்பு அடிக்க வைத்திருந்த 40 கிலோ எடையுள்ள தண்டவாளத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
ராமு கொடுத்த புகாரின் பேரில் சேத்தியாதோப்பு போலீசார் வழக்குப் பதிந்து இரும்பு திருடிய மர்ம நபர்களை தேடிவந்தனர்.
திருடுபோன இரும்பு அங்குள்ள பழைய இரும்பு கடையில் மர்ம நபர்கள் விற்றதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் பேரில் போலீசார் ஆணைவாரியில் உள்ள பழைய இரும்புக் கடைக்கு சென்று சோதனை செய்தனர். இதில் திருடுபோன இரும்பு அங்கு இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் கடையின் உரிமையாளர் ரஞ்சித்திடம், 23; விசாரித்தபோது சின்ன நற்குணத்தைச் சேர்ந்த மணிவாசகம் மகன் மணிமாறன், 23; ஆணைவாரியை சேர்ந்த ராஜகீர்த்தி மகன் சிவராஜ்குமார்,19; ஆகியோர் இரும்பை திருடி விற்பனை செய்தது தெரியவந்தது.
போலீசார் மணிமாறன், சிவராஜ்குமார், ரஞ்சித் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையிலடைத் தனர்.