ADDED : ஜூன் 03, 2024 05:29 AM

நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பம் அரசினர் ஆண்கள் பள்ளி தலைமையாசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
நெல்லிக்குப்பம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் தரணிதரன். இவர் 18 ஆண்டுகளாக ஆசிரியராகவும் கடந்த 5 ஆண்டுகளாக தலைமை யாசிரியராகவும் பணியாற்றியவர். இவர் நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். ஆசிரியர்கள் மற்றும் ஊர் மக்கள் சார்பில் பணிநிறைவு பெற்ற தலைமையாசிரியர் தரணிதரனுக்கு பாராட்டு விழா நடந்தது.
இதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் இளந்தென்றல் ஆகியோர் தலைமையாசிரியர் தரணிதரனை பாராட்டினர்.