Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நெல்லிக்குப்பம் அம்மா உணவகத்தில் பணியாளர்கள் பற்றாக்குறையால் அவதி

நெல்லிக்குப்பம் அம்மா உணவகத்தில் பணியாளர்கள் பற்றாக்குறையால் அவதி

நெல்லிக்குப்பம் அம்மா உணவகத்தில் பணியாளர்கள் பற்றாக்குறையால் அவதி

நெல்லிக்குப்பம் அம்மா உணவகத்தில் பணியாளர்கள் பற்றாக்குறையால் அவதி

ADDED : ஜூலை 22, 2024 01:16 AM


Google News
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சி அம்மா உணவகத்தில் ஆட்கள் பற்றாக்குறையால் பணிகள் பாதிக்கிறது.

தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகத்தில் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்குமு் ,மதியம் சாப்பாடு 5 ரூபாய்க்கும் வழங்குகின்றனர்.

விலை குறைவாக இருப்பதால் ஏழை மக்கள் இதை பயன்படுத்தி பசியாறி வருகின்றனர்.

நெல்லிக்குப்பம் நகராட்சியில் செயல்படும் அம்மா உணவகத்தில் 12 பேர் பணியாற்றினர்.

தினமும் காலை 400 இட்லியும் மதியம் அதிகபட்சம் 80 கலவை சாதங்களும் விற்பனை செய்கின்றனர்.

இட்லி மாவு அறைக்க கிரைண்டர் இருந்தது.அது பழுதானதால் மாவு அறைக்க முடியாமல் வெளியே சென்று அறைத்து வருவதால் பணியாளர்கள் சிரமபடுகின்றனர்.

அதேபோல் உணவு பொருட்கள் கெடாமல் பாதுகாக்க வாங்கிய பிரிட்ஜ் பழுதாகியுள்ளது.

நாளடைவில் பணியாளர்களை குறைத்து கொண்டே வந்து தற்போது 12 பேர் வேலை செய்த இடத்தில் 3 பேர் மட்டுமே வேலை செய்கின்றனர்.

ஆனால் அவர்கள் 12 பேர் பணியாற்றிய அதே வேலையை தற்போது பணியாற்றும் 3 ஊழியர்கள் மட்டுமே செய்வதால் குறித்த நேரத்துக்கு உணவு கொடுக்க சிரமபடுகின்றனர்.

ஏழைகள் நலன்கருதி உடனடியாக கூடுதல் பணியாளர்களை நியமிப்பதோடு பழுதான இயந்திரங்களை சரி செய்து கொடுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us