ஒறையூர் பள்ளியில் திருக்குறள் விழா
ஒறையூர் பள்ளியில் திருக்குறள் விழா
ஒறையூர் பள்ளியில் திருக்குறள் விழா
ADDED : ஜூலை 21, 2024 06:32 AM

கடலுார்: பண்ருட்டி அடுத்த ஒறையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் திருக்குறள் விழா நடந்தது.
தலைமை ஆசிரியை பவுலின் தலைமை தாங்கினார். தமிழ் ஆசிரியர் செம்பையன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர் உலக திருக்குறள் பேரவை மாவட்டத் தலைவர் பாஸ்கரன், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
ஆசிரியர்கள் சீதாலட்சுமி, சதீஷ் ஆகியோர் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியை ஒருங்கிணைப்பு செய்தனர்.
செயலாளர் நடராஜன் வாழ்த்திப் பேசினார். மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.