Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'சிறகுகள்' கடன் திட்டம்; பயன்படுத்த அழைப்பு

'சிறகுகள்' கடன் திட்டம்; பயன்படுத்த அழைப்பு

'சிறகுகள்' கடன் திட்டம்; பயன்படுத்த அழைப்பு

'சிறகுகள்' கடன் திட்டம்; பயன்படுத்த அழைப்பு

ADDED : ஜூன் 13, 2025 10:13 PM


Google News
கோவை; 'சிறகுகள்' என்ற சிறப்பு கடன் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள, மூன்றாம் பாலினத்தவருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

மூன்றாம் பாலினத்தவர்கள், தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான அடிப்படை நிதி சேவைகளை பெறுவதில், சிரமங்களை சந்திக்கின்றனர். பொருளாதார ரீதியாக அவர்களை பலப்படுத்தும் வகையில், 'சிறகுகள்' என்ற சிறப்பு கடன் திட்டத்தை, தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட மத்திய மற்றும் நகர கூட்டுறவு வங்கிகளில், இதற்காக கடன் வழங்கப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்டோர் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

இந்த கடன், சமூகநலன் சார்ந்த கடன் என்பதாலும், மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் என்பதாலும், 5 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சிறு தொழில்கள், சுய தொழில் செய்பவர்கள் இந்த கடன்களை பெற இயலும். கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வாயிலாக, நடப்பு நிதியாண்டில் இதுவரை 4 பேருக்கு, ரூ.2 லட்சம் மதிப்பில் கடன் வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் இணைந்து பயன்பெற, அருகில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கிளைகளை அணுகலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us