/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவை ரேஷன் கடைகளில் எலக்ட்ரானிக் தராசு தயார் கோவை ரேஷன் கடைகளில் எலக்ட்ரானிக் தராசு தயார்
கோவை ரேஷன் கடைகளில் எலக்ட்ரானிக் தராசு தயார்
கோவை ரேஷன் கடைகளில் எலக்ட்ரானிக் தராசு தயார்
கோவை ரேஷன் கடைகளில் எலக்ட்ரானிக் தராசு தயார்
ADDED : ஜூன் 13, 2025 10:13 PM
கோவை; ''ரேஷன் கடைகளில் எடைபோடும் எலக்ட்ரானிக் தராசை, பிஓஎஸ் மெஷினுடன் புளூடூத் வாயிலாக இணைக்கும் பணி முடிந்து விட்டன.
ரேஷன் கடைகளில் வாங்கும் உணவு பொருட்கள், சரியான எடையில் இருக்க வேண்டும் என்பதற்காக எடைபோடும் எக்ட்ரானிக் தராசை, பில் போடும் பிஓஎஸ் மெஷினுடன் புளூடூத் வாயிலாக இணைக்கும் நடைமுறை, தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. கோவை ரேஷன் கடைகளில் நடைபெற்று வந்த, இதற்கான தொழில்நுட்ப பணிகள், தற்போது முடிவடைந்துள்ளன.
இது குறித்து, கோவை மாவட்ட கூட்டுறவு சங்க அதிகாரிகள் கூறுகையில், 'எலக்ட்ரானிக்ஸ் எடை தராசு மற்றும் பிஓஎஸ் கருவி இரண்டையும், புளூடூத்துடன் இணைக்கும் பணி, கூட்டுறவு சங்க கடைகளில், முழுமையாக முடிவடைந்துள்ளன.
அரசு ரேஷன்கடைகளில் பணி, இன்னும் சில தினங்களில் முடியும். புளூடூத் இணைப்புள்ள கடைகளில், பொருட்கள் வழங்குவதில் பிரச்னை இல்லை. எடை போடுவதில் காலதாமதம் ஆவதாக சில இடங்களில் புகார் வந்துள்ளது. விரைவில் இந்த பிரச்னையும் சரியாகிவிடும்' என்றனர்.