Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ போக்குவரத்து மாற்றம் செய்வதில் சிக்கல்

போக்குவரத்து மாற்றம் செய்வதில் சிக்கல்

போக்குவரத்து மாற்றம் செய்வதில் சிக்கல்

போக்குவரத்து மாற்றம் செய்வதில் சிக்கல்

ADDED : ஜூன் 13, 2025 10:14 PM


Google News
Latest Tamil News
கோவை; கோவை - அவிநாசி சாலையில் கட்டப்படும் மேம்பாலம் பணிகளால், போக்குவரத்து மாற்றம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கோவை - அவிநாசி சாலை, உப்பிலிபாளையத்திலிருந்து சின்னியம்பாளையம் வரை, 10.1 கி.மீ., தொலைவிற்கு 1,621.30 கோடி ரூபாயில், மாநில நெடுஞ்சாலைத் துறையால் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. 2020ம் ஆண்டு டிச.,ல் கட்டுமான பணி துவங்கியது.

மேம்பாலம், 17.25 மீட்டர் அகலத்தில், நான்கு வழிச்சாலையாக அமைக்கப்படுகிறது. 10.5 மீட்டர் அகலத்தில் சாலையின் இரு பக்கங்களிலும், சர்வீஸ் சாலைகளும், ஒன்றரை மீட்டர் அகலத்தில் மழை நீர் வடிகால் மற்றும் நடைபாதையும் அமைக்கப்பட்டு வருகிறது.

ஜூலை 30 இலக்கு


கட்டுமான பணிகள், 95 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், ஜூலை, 30க்குள் பணிகள் முழுமையாக நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஹோப்ஸ் பகுதியில் உள்ள ரயில்வே பாலத்தை கடக்கும் பணிகள் மீதம் உள்ளன.

அப்பகுதியில் ரயில்வே பாலம் உள்ளதால், துாண்கள் நிறுவ முடியாது. இதனால், அந்த 52 மீ., இடைவெளியை எட்டு கர்டர்கள் கொண்டு, பாலம் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ரயில்வே தண்டவாளம் இருப்பதால், ரயில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில், மேம்பால பணிகளை மேற்கொள்ள, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ரயில்வே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

சந்தேகம்தான்


அப்பகுதியில் பாலம் வேலை துவங்கப்பட்டால், போக்குவரத்து மாற்றம் செய்ய வேண்டும். இந்நிலையில் ஏழு நாட்களுக்கு தினசரி காலை, 9:00 முதல் 11:00 மணி வரை மேம்பாலம் பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிப்பதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், கல்லுாரிகள், ஐ.டி.,நிறுவனங்கள் என மிகவும் பிசியாக இருக்கும் ஹோப்ஸ் பகுதியில், 'பீக் ஹவர்ஸ்'ல் போக்குவரத்து மாற்றம் செய்வது சவாலானது.

அதனால் ஜூலையில் மேம்பாலம் திறக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வருவது சந்தேகமாகவே உள்ளது.

ஒத்துழைத்தால் முடியும்

போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,'ஹோப்ஸ் கோவையின் முக்கியமான பகுதியாகும். வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள், ஆம்னி பஸ்கள், கல்லுாரி, ஐ.டி., நிறுவனங்கள் செல்லும் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தும் பகுதி. இங்கு, காலை 9:00 முதல் 11:00 மணி வரை, வரும் வாகனங்களை வேறு வழியில் அனுப்புவது எளிதல்ல. அதற்கான மாற்று பாதை வசதிகளும் இங்கு இல்லை. 'ஏழு நாட்கள் தினமும், காலை நேரத்தில் போக்குவரத்து மாற்றம் செய்தால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். இதற்கு பதிலாக, மூன்று நாட்கள் இரவு நேரங்களில் ஒரு ஐந்து மணிநேரம் அனுமதி அளித்தால், பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் போக்குவரத்து மாற்றம் செய்ய முடியும். அதற்கு ரயில்வே அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும்' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us