/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ துடியலுாரில் தாகம் தணிக்க நீர்மோர் பந்தல் துவக்கம் துடியலுாரில் தாகம் தணிக்க நீர்மோர் பந்தல் துவக்கம்
துடியலுாரில் தாகம் தணிக்க நீர்மோர் பந்தல் துவக்கம்
துடியலுாரில் தாகம் தணிக்க நீர்மோர் பந்தல் துவக்கம்
துடியலுாரில் தாகம் தணிக்க நீர்மோர் பந்தல் துவக்கம்
ADDED : மார் 25, 2025 05:59 AM

கோவை; துடியலூர் மணியன் குலம் காளியம்மாள் அறக்கட்டளை, ஸ்ரீ கணபதி மார்ட் துடியலுார், ஸ்ரீ குபேர ஆஞ்சநேயர் அன்னதான கைங்கரிய டிரஸ்ட் சார்பில், துடியலுார், ஸ்ரீ கணபதி மார்ட் முன்பாக, நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த, சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமி, மோர் பந்தலை திறந்து வைத்தார். இதில், மணியன் குலம் அறக்கட்டளை செயலாளர் சண்முகம், ஸ்ரீ கணபதி மார்ட் நிர்வாக இயக்குனர் கணபதி, ஸ்ரீ குபேர ஆஞ்சநேயர் அன்னதான கைங்கரிய டிரஸ்ட் அறங்காவலர் கவிச்சந்திர மோகன் மற்றும் செயலாளர் இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர்.