/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரயிலில் 62 கிலோ கஞ்சா கடத்தல்; பெண்கள் உட்பட ஆறு பேர் கைது ரயிலில் 62 கிலோ கஞ்சா கடத்தல்; பெண்கள் உட்பட ஆறு பேர் கைது
ரயிலில் 62 கிலோ கஞ்சா கடத்தல்; பெண்கள் உட்பட ஆறு பேர் கைது
ரயிலில் 62 கிலோ கஞ்சா கடத்தல்; பெண்கள் உட்பட ஆறு பேர் கைது
ரயிலில் 62 கிலோ கஞ்சா கடத்தல்; பெண்கள் உட்பட ஆறு பேர் கைது
ADDED : மார் 25, 2025 05:59 AM
கோவை; ரயில் வாயிலாக கடத்தி வரப்பட்ட, 62 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஐந்து பெண்கள் உட்பட ஆறு பேரை சிறையில் அடைத்தனர்.
தன்பாத் - ஆலப்புழா(13351) இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று காலை 8:30 மணிக்கு கோவை ரயில்வே ஸ்டேஷன் வந்தது. ரயிலில் இருந்து இறங்கிய ஐந்து பெண்கள் உட்பட ஆறு பேர், வெள்ளை பாலித்தீன் பைகளை சுமந்து செல்வதை, ரயில்வே பாதுகாப்பு படையினர் பார்த்தனர்.
அவர்களை தடுத்து சோதனை செய்ததில், அதில் கஞ்சா மறைத்து எடுத்துச் செல்லப்படுவது தெரிந்தது. விசாரணையில், அவர்கள், ஒடிசா மாநிலம், காந்தம்மாள் மாவட்டம் பாலிகுடாவை சேர்ந்த ஜாபாத் திகல், 25, கண்டி திகல், 46, சுலாடா நாயக், 37, ருபிணா நாயக், 44, ஜயோத்சாரிணி, 44, கேலி நாயக், 32 எனத் தெரிந்தது.
அவர்களிடம் இருந்து, ரூ.31 லட்சம் மதிப்பிலான, 62 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஆறு பேரும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை போலீசார் சிறையில் அடைத்தனர்.