/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவை மாவட்ட கிரிக்கெட் சங்க டிவிஷன் போட்டியில் வீரர்கள் 'சபாஷ்' கோவை மாவட்ட கிரிக்கெட் சங்க டிவிஷன் போட்டியில் வீரர்கள் 'சபாஷ்'
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்க டிவிஷன் போட்டியில் வீரர்கள் 'சபாஷ்'
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்க டிவிஷன் போட்டியில் வீரர்கள் 'சபாஷ்'
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்க டிவிஷன் போட்டியில் வீரர்கள் 'சபாஷ்'
ADDED : மார் 25, 2025 05:58 AM

கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், சக்தி இன்ஜி., கல்லுாரி, பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்., உள்ளிட்ட மைதானங்களில், 'டிவிஷன்' போட்டிகள் நடக்கின்றன.
இரண்டாவது டிவிஷன் 'யுனிவர்சல் ஹீட் எக்ஸ்சேஞ்சர்ஸ் பிரைவேட் லிட்., டிராபி' போட்டியில் ரெயின்போ கிரிக்கெட் கிளப் அணியும், விஜய் கிரிக்கெட் கிளப் அணியும் மோதின.
பேட்டிங் செய்த ரெயின்போ கிரிக்கெட் கிளப், 50 ஓவரில், 328 ரன்கள் எடுத்தது. வீரர் ஹரிஹரன், 111 ரன்கள் எடுத்து 'அவுட்' ஆகாமல் இருந்தார். வீரர்கள் ஆதித்யன், 56 ரன்களும், சாதிக் அல் அமீன், 52 ரன்களும், ராமநாராயணன், 34 ரன்களும் அதிகபட்சமாக எடுத்தனர்.
அடுத்து விளையாடிய விஜய் கிரிக்கெட் கிளப், 42.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 188 ரன்கள் எடுத்தது. வீரர் கண்ணன், 68 ரன்கள், அன்பு, 52 ரன்கள், பிரபுகுமார், 38 ரன்களும் எடுத்தனர். ரெயின்போ வீரர் சாதிக் அல் அமீன் நான்கு விக்கெட்டும், சூர்யகாந்த் மூன்று விக்கெட்டும் வீழ்த்தினர்.
மூன்றாவது டிவிஷன் 'என்.தாமோதரன் வெல்பேர் டிரஸ்ட் டிராபி' போட்டியில், கே.எம்.பி., சி.சி., அணியும், யங் பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும் மோதின. பேட்டிங் செய்த கே.எம்.பி., சி.சி., அணி, 37.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 121 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய யங் பிரண்ட் கிரிக்கெட் கிளப் அணி, 31 ஓவரில் ஐந்து விக்கெட்டுக்கு, 124 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக வீரர் நவீன்குமார், 48 ரன்கள், ரூபக் குமார், 44 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர். தொடர்ந்து, போட்டிகள் நடக்கின்றன.