/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ முன்னாள் மாணவர் சங்க கோப்பை; இரண்டாம் நாள் விளையாட்டு விழா முன்னாள் மாணவர் சங்க கோப்பை; இரண்டாம் நாள் விளையாட்டு விழா
முன்னாள் மாணவர் சங்க கோப்பை; இரண்டாம் நாள் விளையாட்டு விழா
முன்னாள் மாணவர் சங்க கோப்பை; இரண்டாம் நாள் விளையாட்டு விழா
முன்னாள் மாணவர் சங்க கோப்பை; இரண்டாம் நாள் விளையாட்டு விழா
ADDED : மார் 25, 2025 06:12 AM

பெ.நா.பாளையம்; ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில், முன்னாள் மாணவர்கள் சங்க கோப்பைக்கான இரண்டாம் நாள் விளையாட்டு விழா நடந்தது.
துடியலூர் அருகே, வட்டமலைப்பாளையம் ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியில் மாணவ, மாணவியருக்கான வாலிபால் போட்டி மற்றும் மாணவர்களுக்கான ஹேண்ட் பால் போட்டி நடந்தது. இதில், பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த, மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இதில், ஆண்களுக்கான ஹேண்ட் பால் போட்டியில், 13 அணிகள் பங்கேற்றன. போட்டிகள், 'நாக்அவுட்' மற்றும் 'லீக்' முறையில் நடந்தது. லீக் சுற்றில் பி.எஸ்.ஜி., டெக்., ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி, ஸ்ரீ சக்தி இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் ராமகிருஷ்ணா முன்னாள் மாணவர்கள் அணி தகுதி பெற்றனர்.
புள்ளிகள் அடிப்படையில், முதல் இடத்தை ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி அணியும், பி.எஸ்.ஜி., டெக் அணி இரண்டாவது இடத்தையும், ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி முன்னாள் மாணவர்கள் அணி மூன்றாம் இடத்தையும், ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி அணி நான்காம் இடத்தையும் பெற்றது.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.