/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தண்டவாளப் பகுதிகளில் அத்துமீறி நுழைவது தண்டனைக்குரிய குற்றம்; விபத்து தடுக்க தடுப்பு வேண்டும் தண்டவாளப் பகுதிகளில் அத்துமீறி நுழைவது தண்டனைக்குரிய குற்றம்; விபத்து தடுக்க தடுப்பு வேண்டும்
தண்டவாளப் பகுதிகளில் அத்துமீறி நுழைவது தண்டனைக்குரிய குற்றம்; விபத்து தடுக்க தடுப்பு வேண்டும்
தண்டவாளப் பகுதிகளில் அத்துமீறி நுழைவது தண்டனைக்குரிய குற்றம்; விபத்து தடுக்க தடுப்பு வேண்டும்
தண்டவாளப் பகுதிகளில் அத்துமீறி நுழைவது தண்டனைக்குரிய குற்றம்; விபத்து தடுக்க தடுப்பு வேண்டும்
ADDED : செப் 10, 2025 10:29 PM
கோவை; கோவை இருப்பு பாதை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், போத்தனுார் - இருகூர், வடகோவை - இருகூர், போத்தனுார் - வடகோவை, வடகோவை - துடியலுார் ரயில் பாதைகள் இடம் பெற்றுள்ளன.
இவற்றில் நடக்கும் குற்றச்சம்பவங்கள், விபத்து தடுக்கும் பணிகளில், மாநில ரயில்வே போலீசார் (ஜி.ஆர்.பி.,), ரயில்வே பாதுகாப்பு படையினர் (ஆர்.பி.எப்.,) ஈடுபட்டு வருகின்றனர்.
ரயில்பாதைகளில் அத்துமீறி நுழைவதாலேயே, அதிக விபத்துகள் நடப்பது தெரிய வந்துள்ளது. இயற்கை உபாதையை கழிக்க, தண்டவாளப் பகுதிக்கு அருகில் செல்லும்போது, விபத்து நடப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக மொபைல்போன் பயன்பாடு, காதுகளில் இயர்போன் பொருத்திக் கொண்டு, தண்டவாளத்தை கடக்கும்போது, ரயில் வருவது தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர்.
தண்டவாளப் பகுதிகளில் அத்துமீறி நுழைவது தண்டனைக்குரிய குற்றம் என்பது பலருக்கும் தெரிவதில்லை. அதனால் ஏற்படும் விபத்தை தடுக்க, தண்டவாளங்களுக்கு அருகில் தடுப்பு வேலி அமைக்க, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரயில்வே போலீஸ் உயர் அலுவலர் ஒருவர் கூறுகையில், 'அதிக விபத்து நடந்த பகுதிகள் கண்டறியப்பட்டு, அதிகாலை, இரவு நேரங்களில் கூடுதல் ரோந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது
தண்டவாளங்களுக்கு அருகில் செல்வதை தடுக்க, தடுப்பு வேலி அமைக்க ரயில்வே நிர்வாகத்துக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. தண்டவாளங்களுக்கு அருகில் உள்ள குடியிருப்புவாசிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கேமராக்கள் பொருத்துவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்' என்றார்.
இயற்கை உபாதையை கழிக்க, தண்டவாளப் பகுதிக்கு அருகில் செல்லும்போதும், காதுகளில் இயர்போன் பொருத்திக் கொண்டு, போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்கும்போதும், ரயில் வருவது தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர்.