/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரசு மருத்துவமனை சிகிச்சையில் மீண்ட 90 சதவீத காசநோயாளிகள்; தொடர் சிகிச்சையால் சாத்தியமானது அரசு மருத்துவமனை சிகிச்சையில் மீண்ட 90 சதவீத காசநோயாளிகள்; தொடர் சிகிச்சையால் சாத்தியமானது
அரசு மருத்துவமனை சிகிச்சையில் மீண்ட 90 சதவீத காசநோயாளிகள்; தொடர் சிகிச்சையால் சாத்தியமானது
அரசு மருத்துவமனை சிகிச்சையில் மீண்ட 90 சதவீத காசநோயாளிகள்; தொடர் சிகிச்சையால் சாத்தியமானது
அரசு மருத்துவமனை சிகிச்சையில் மீண்ட 90 சதவீத காசநோயாளிகள்; தொடர் சிகிச்சையால் சாத்தியமானது
ADDED : செப் 10, 2025 10:30 PM

கோவை; 'தேசிய காசநோய் ஒழிப்பில் தற்போதைய மேம்பாடு' என்ற தலைப்பில், கோவை அரசு மருத்துவ கல்லுாரி நுரையீரல் பிரிவு மற்றும் மாவட்ட காசநோய் ஒழிப்பு திட்ட பிரிவு சார்பில், பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம், அரசு மருத்துவமனை அரங்கில் நேற்று நடந்தது. மருத்துவமனை டீன் கீதாஞ்சலி துவக்கி வைத்தார்.
இதில், நுரையீரல் சிகிச்சை துறை தலைவர் டாக்டர் கீர்த்திவாசன் கூறியதாவது:
காசநோய் கண்டறிதல், மருந்து, சிகிச்சை முறை நிறைய மேம்பட்டுள்ளன. களப்பணியாளர்கள், டாக்டர்கள், செவிலியர் கள், முதுநிலை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. கடந்த காலங்களில், 18 முதல் 20 மாதங்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். தற்போது, ஆறு மாதங்கள் தொடர்ந்து சிகிச்சை எடுத்தால் போதும். மருந்து எண்ணிக்கையும் நான்காக குறைக்கப்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவமனைகளில், 200 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, 90 சதவீதம் பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர். டாக்டர்களின் அறிவுறுத்தல்படி, முறையாக மருந்து எடுத்துக்கொள்ளாதவர்கள், மதுப்பழக்கம் உள்ளவர்கள், இணை நோய்களால் தாக்கப்பட்டவர்கள் குணமடைவது சிரமம். அறிவுறுத்தல்களை பின்பற்றினால், எளிதாக மீண்டு விடலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
நுரையீரல் சிகிச்சை பிரிவு மருத்துவர்கள், மாணவர்கள், காசநோய் ஒழிப்பு திட்ட களப்பணியாளர்கள் பங்கேற்றனர்.