/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மேலாண்மை குழுவினருக்கு பயிற்சி 6 பள்ளிகளின் 70 பேர் பங்கேற்பு மேலாண்மை குழுவினருக்கு பயிற்சி 6 பள்ளிகளின் 70 பேர் பங்கேற்பு
மேலாண்மை குழுவினருக்கு பயிற்சி 6 பள்ளிகளின் 70 பேர் பங்கேற்பு
மேலாண்மை குழுவினருக்கு பயிற்சி 6 பள்ளிகளின் 70 பேர் பங்கேற்பு
மேலாண்மை குழுவினருக்கு பயிற்சி 6 பள்ளிகளின் 70 பேர் பங்கேற்பு
ADDED : மே 24, 2025 06:00 AM

உடுமலை : உடுமலை வட்டார அளவில், பள்ளி மேலாண்மைக் குழுவினருக்கான சிறப்பு பயிற்சி கூட்டம் நடந்தது.
புதிய கல்வியாண்டில், பள்ளி மேலாண்மைக்குழுக்களை புதுப்பிக்கும் வகையில், சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
இதன்படி, உடுமலை வட்டார அளவில் பள்ளி மேலாண்மைக்குழுவினருக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு, பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
இப்பயிற்சி வகுப்பு, முதற்கட்டமாக, ஆறு பள்ளிகளைச்சேர்ந்தவர்களுக்கு நடந்தது. பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிவசக்தி காலனி அரசு உயர்நிலைப்பள்ளி, உடுக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பாலப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கிளுவன்காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மலையாண்டிபட்டிணம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளை சேர்ந்த 70க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பள்ளி மேலாண்மைக்குழுவினருக்கான வாட்ஸ் ஆப் குழு அமைப்பது, கட்டாய கல்வி உரிமை சட்டம், உறுப்பினர்களின் கடமைகள், பங்களிப்பு, பொறுப்புகள், பள்ளிகல்வித்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் பெற்றோருக்கான செயலியை பயன்படுத்துதல் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
அரசு பெண்கள் பள்ளி தலைமையாசிரியர் விஜயா பயிற்சியை துவக்கி வைத்தார். மாவட்ட கல்வித்துறை அலுவலர்கள், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட மாவட்ட உதவி திட்ட அலுவலர் அண்ணாதுரை முன்னிலை வகித்தனர்.
வட்டார கல்வி அலுவலர்கள் சுசீலா, மஞ்சுளா பயிற்சியை பார்வையிட்டனர்.
வட்டார வள மைய மேற்பார்வையாளர் சண்முகசுந்தரம் மற்றும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் பயிற்றுனர் ராம்பிரசாத் பயிற்சியை ஒருங்கிணைத்தார்.