/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 12மணி நேர யோகாசனம் மாணவன் உலக சாதனை 12மணி நேர யோகாசனம் மாணவன் உலக சாதனை
12மணி நேர யோகாசனம் மாணவன் உலக சாதனை
12மணி நேர யோகாசனம் மாணவன் உலக சாதனை
12மணி நேர யோகாசனம் மாணவன் உலக சாதனை
ADDED : மே 24, 2025 06:05 AM

ஆனைமலை : ஆனைமலை அருகே, 12 மணி நேரம் யோகாசனம் செய்து மாணவர் அசத்தினார்.
உடுமலை மரகதம் யோகாலயத்தின் ஒருங்கிணைப்பில், ைஹரேஞ்ச் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் என்ற உலக சாதனை புத்தக முயற்சி, ஆனைமலை அருகே தனியார் மஹாலில் நடந்தது.
அதில், கல்லுாரி மாணவர் ஹரிகவுசிக் தொடர்ந்து, 12 மணி நேரம் யோகாசனம் செய்து உலக சாதனை படைத்தார். இந்த நிகழ்வை ஆனைமலை தி.மு.க., ஒன்றிய செயலாளர் யுவராஜ் துவக்கி வைத்தார். தி.மு.க., கோவை தெற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை வகித்து பேசினார்.
யோகா ஆசிரியர் குணசேகரன் கூறுகையில், ''இதுபோன்ற சாதனைகள், இளைய தலைமுறையினரிடம் நம்பிக்கையும், ஒழுக்கம், பண்பாட்டையும் வளர்ப்பதற்கு உதவியாக இருக்கும்,'' என்றார்.