/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ எஸ்.என்.எஸ். கல்லுாரியில் ஸ்டெம் செல் தானதாரர் பதிவு எஸ்.என்.எஸ். கல்லுாரியில் ஸ்டெம் செல் தானதாரர் பதிவு
எஸ்.என்.எஸ். கல்லுாரியில் ஸ்டெம் செல் தானதாரர் பதிவு
எஸ்.என்.எஸ். கல்லுாரியில் ஸ்டெம் செல் தானதாரர் பதிவு
எஸ்.என்.எஸ். கல்லுாரியில் ஸ்டெம் செல் தானதாரர் பதிவு
ADDED : செப் 21, 2025 11:25 PM

கோவை; சரவணம்பட்டியில் உள்ள எஸ்.என்.எஸ்., கல்வி நிறுவனத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்ற ஸ்டெம் செல் தானதாரர் பதிவு முகாம் நடந்தது.
எஸ்.என்.எஸ். கல்வி குழும நிர்வாகத்தினர் கூறியதாவது:
எஸ்.என்.எஸ். கல்லுாரி இளைஞர் ரெட் கிராஸ் மற்றும் ரெட் ரிப்பன் கிளப், டாட்ரி - பிளட் ஸ்டெம் செல் }ரெஜிஸ்ட்ரி சார்பில் நடந்த இம்முகாமில், ஸ்டெம் செல் தானத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாணவர்கள், ஆசிரியர்களை தானதாரர்களாக பதிவு செய்ய வைத்து, அவர்களை சமூக பணியில் ஈடுபட வைக்கும் முயற்சியாக இம்முகாம் நடத்தப்பட்டது. மாணவர்கள், ஆசிரியர்கள் என, 4,500 பேர் பதிவு செய்தனர். இது, லுாகேமியா மற்றும் தலசீமியா போன்ற ரத்த கோளாறு உள்ள நோயாளிகளின் உயிரை காப்பதில், எங்களின் பங்களிப்பாகும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.