/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வேலை வாங்கித்தருவதாக ரூ.2.36 லட்சம் மோசடி வேலை வாங்கித்தருவதாக ரூ.2.36 லட்சம் மோசடி
வேலை வாங்கித்தருவதாக ரூ.2.36 லட்சம் மோசடி
வேலை வாங்கித்தருவதாக ரூ.2.36 லட்சம் மோசடி
வேலை வாங்கித்தருவதாக ரூ.2.36 லட்சம் மோசடி
ADDED : செப் 21, 2025 11:25 PM
கோவை; வேலை வாங்கித்தருவதாக ரூ.2.36 லட்சத்தை மோசடி செய்தவர் மீது, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தை சேர்ந்தவர் ஜிந்தா ஓஸ்மான், 30. கடந்த ஓராண்டுக்கு முன், விளம்பரம் ஒன்றை பார்த்தார். அதில் நிரந்தர வேலை வேண்டுவோர் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் கொடுக்கப்பட்டிருந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அதில் பேசிய நபர், தனது பெயர் இக்பால் என்றும், வேலை வேண்டும் எனில், பணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஜிந்தா ஓஸ்மான், ரூ.2.36 லட்சம் வழங்கினார். வேலை வாங்கித்தராமல் இக்பால் காலம் தாழ்த்தி வந்தார். கோவை உக்கடம் போலீசாரிடம், ஜிந்தா ஓஸ்மான் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.