ADDED : செப் 21, 2025 11:25 PM
கோவை; இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலனின், 98-வது பிறந்த நாள் விழா இந்து எழுச்சி தினமாக, நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக, கோவை மாநகர், மாவட்ட இந்து முன்னணி சார்பாக ராமகோபாலனின் பிறந்த நாள் விழா, கோவை காட்டூரிலுள்ள இந்து முன்னணி தலைமை அலுவலகத்துக்கு முன் அமைந்துள்ள திடலில், அவரது உருவப்படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது.
அன்னதானம் வழங்கப்பட்டது. துாய்மைப்பணியாளர்களுக்கு உடை வழங்கப்பட்டது. இது போல் நகரின் பல பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளிலும், பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. வேடப்பட்டியில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. உக்கடத்தில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது.