/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரயில்வே ஸ்டேஷனில் மேற்கூரை பணி தீவிரம் ரயில்வே ஸ்டேஷனில் மேற்கூரை பணி தீவிரம்
ரயில்வே ஸ்டேஷனில் மேற்கூரை பணி தீவிரம்
ரயில்வே ஸ்டேஷனில் மேற்கூரை பணி தீவிரம்
ரயில்வே ஸ்டேஷனில் மேற்கூரை பணி தீவிரம்
ADDED : செப் 22, 2025 10:11 PM

கிணத்துக்கடவு:
கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனில் மேற்கூரை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடக்கிறது.
கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனில் நாளுக்கு நாள் பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பயணியர் பிளாட்பாரத்துக்கு படி ஏறி செல்லும் நிலை உள்ளது. இதில், மழை காலத்தில் மழை நீர் தேங்கி நிற்பதால், பயணியர்கள் செல்லும் போது வழுக்கி விழுகின்றனர்.
இதனால், பலருக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. மேலும், பிளாட்பாரத்தின் ஒரு சில பகுதிகளில் மழை நீர் வழிந்தோடிய நிலையில் இருந்தது. இதை சரி செய்யக்கோரி ரயில் பயணியர் சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர். தற்போது ரயில்வே நிர்வாகம் சார்பில் மேற்கூரை அமைக்கும் பணிகள் நடக்கிறது. இதனால், பயணியர் நிம்மதி அடைந்துள்ளனர்.