/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோரிக்கைகளை வலியுறுத்தி த.வெ.க. ஆர்ப்பாட்டம் கோரிக்கைகளை வலியுறுத்தி த.வெ.க. ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி த.வெ.க. ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி த.வெ.க. ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி த.வெ.க. ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 22, 2025 10:11 PM

வால்பாறை:
பத்து அம்ச கோரிக்ககைகளை வலியுறுத்தி த.வெ.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
வால்பாறை த.வெ.க., சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய பஸ் ஸ்டாண்ட் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ., ஸ்ரீதரன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் ஆண்ட்ரூஸ், நகர இணை செயலாளர் சையதுஅலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தை கோவை தெற்கு மாவட்ட செயலாளர் விக்னேஷ் துவக்கி வைத்தார்.
ஆர்ப்பாட்டத்தில், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக, 570 ரூபாய் வழங்க வேண்டும். வனவிலங்கு - மனித மோதலை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகராட்சி கால்பந்து விளையாட்டு மைதானத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும். தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு, 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும்.
வால்பாறை அரசு மருத்துவமனையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். வால்பாறையை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.