/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மீட்கப்பட்ட குட்டி யானை கோழிகமுத்தி முகாம் வந்தது மீட்கப்பட்ட குட்டி யானை கோழிகமுத்தி முகாம் வந்தது
மீட்கப்பட்ட குட்டி யானை கோழிகமுத்தி முகாம் வந்தது
மீட்கப்பட்ட குட்டி யானை கோழிகமுத்தி முகாம் வந்தது
மீட்கப்பட்ட குட்டி யானை கோழிகமுத்தி முகாம் வந்தது
ADDED : ஜூன் 13, 2025 09:35 PM

பொள்ளாச்சி; மேட்டுப்பாளையம் சிறுமுகை அருகே, மீட்கப்பட்ட குட்டி யானை, டாப்சிலிப் அருகே கோழிகமுத்தி முகாமிற்கு அழைத்து வரப்பட்டது.
கோவை வனக்கோட்டம், சிறுமுகை வனச்சரகத்தில், கடந்த மாதம், 26ம் தேதி தாயை பிரிந்து தவித்த, ஆண் குட்டி யானையை வனத்துறையினர் மீட்டனர். யானையை கூட்டத்துடன் குட்டியை சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், மழை போன்ற காரணங்களினால் யானை கூட்டம் தென்படவில்லை. மீட்கப்பட்ட குட்டி யானை, வனத்துறையினர், கால்நடை டாக்டர்கள் பராமரித்தனர். குட்டி யானை ஆரோக்கியமாக உள்ளதையடுத்து, பாதுகாப்பாக டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமிற்கு அனுப்ப உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமிற்கு, வாகனத்தில் குட்டி யானையை அழைத்து வந்தனர். அங்கு சிறப்பு கூண்டில் தங்க வைக்கப்பட்டுள்ளது.
மாவுத் கண்ணன், தற்காலிக காவடி முருகன் ஆகியோர் மூலம் குட்டி யானையை சுழற்சி முறையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது, என, டாப்சிலிப் வனச்சரகர் (பொ) வெங்கடேஷ் தெரிவித்தார்.