/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மழை கால முன்னெச்சரிக்கை கண்காணிப்பு தீவிரம்: கலெக்டர் மழை கால முன்னெச்சரிக்கை கண்காணிப்பு தீவிரம்: கலெக்டர்
மழை கால முன்னெச்சரிக்கை கண்காணிப்பு தீவிரம்: கலெக்டர்
மழை கால முன்னெச்சரிக்கை கண்காணிப்பு தீவிரம்: கலெக்டர்
மழை கால முன்னெச்சரிக்கை கண்காணிப்பு தீவிரம்: கலெக்டர்
ADDED : ஜூன் 13, 2025 09:36 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, வடபுதூர் தனியார் திருமண மண்டபத்தில், கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் தலைமையில், மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில், அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முகாமில், இலவச பட்டா, ரேஷன் கார்டு, தையல் இயந்திரம், உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை, 149 பயனாளிகளுக்கு, 6 கோடியே 20 லட்சத்து 95 ஆயிரத்து 265 ரூபாய் மதிப்பீட்டில் கலெக்டர் வழங்கினார். அதன்பின், மக்களிடம் மனுக்கள் பெற்றார்.
கலெக்டர் கூறியதாவது:
சுகாதார துறை வாயிலாக கேன்சர் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மழை நேரத்தில், மக்கள் தங்கள் வீடுகளில் தேங்கியிருக்கும் நீரை உடனடியாக அகற்றம் செய்ய வேண்டும். அப்போது தான், நோய் தொற்றுகளை தடுக்க முடியும். கோவை மாவட்டத்தில் மழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு அதிகரிக்கும்படி துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வால்பாறையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் முகாமிட்டுள்ளனர்.
மழை அதிகம் உள்ள பகுதிகளுக்கு, சுற்றுலா பயணியர் செல்ல தற்காலிக தடை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, கூறினார்.