Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பண பிரச்னை காரணமாக வீட்டை தாக்கிய 5 பேர் கைது

பண பிரச்னை காரணமாக வீட்டை தாக்கிய 5 பேர் கைது

பண பிரச்னை காரணமாக வீட்டை தாக்கிய 5 பேர் கைது

பண பிரச்னை காரணமாக வீட்டை தாக்கிய 5 பேர் கைது

ADDED : ஜூன் 13, 2025 09:34 PM


Google News
நெகமம்; நெகமம் அருகே, பணம் பிரச்னையில் வீட்டை அடித்து நொறுக்கிய, ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நெகமம், செட்டிபுதூரை சேர்ந்தவர் பாலதண்டபாணி, 40, விவசாயி. இவரது உறவினர் செட்டியக்காபாளையத்தை சேர்ந்த மகேந்திரகுமார், 35. இருவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக சொத்து அடமானம் வைத்தது குறித்து, தகராறு இருந்துள்ளது. இந்நிலையில், இரு நாட்களுக்கு முன், இரவு நேரத்தில் பாலதண்டபாணி தனது குடும்பத்துடன், மகேந்திரகுமார் வீட்டிற்கு சென்று, மரக்கட்டை மற்றும் கல்லால் வீடு மற்றும் காரை அடித்து சேதப்படுத்தினார். இதனால், இரு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மகேந்திரகுமார் தாக்கப்பட்டார்.

இது குறித்து, நெகமம் போலீசில் மகேந்திரகுமார் கொடுத்த புகாரின் பேரில், பாலதண்டபாணி, 40, அவரது மனைவி தேவி, 38, 17 வயது மகன், 16 வயது மகள், கார் டிரைவர் வீரன், 25, ஆகிய ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us