/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மின் வினியோக பாதை ரூ.9.84 கோடியில் சீரமைப்பு; கோவை நகர் பகுதி மேற்பார்வை பொறியாளர் தகவல் மின் வினியோக பாதை ரூ.9.84 கோடியில் சீரமைப்பு; கோவை நகர் பகுதி மேற்பார்வை பொறியாளர் தகவல்
மின் வினியோக பாதை ரூ.9.84 கோடியில் சீரமைப்பு; கோவை நகர் பகுதி மேற்பார்வை பொறியாளர் தகவல்
மின் வினியோக பாதை ரூ.9.84 கோடியில் சீரமைப்பு; கோவை நகர் பகுதி மேற்பார்வை பொறியாளர் தகவல்
மின் வினியோக பாதை ரூ.9.84 கோடியில் சீரமைப்பு; கோவை நகர் பகுதி மேற்பார்வை பொறியாளர் தகவல்
ADDED : செப் 09, 2025 10:37 PM
கோவை; கோவையில், நாளொன்றுக்கு, 2,200 மெகாவாட் முதல் 2,600 மெகாவாட் வரை மின்நுகர்வு செய்யப் படுகிறது. மின்வாரியத் துக்கு மின் இழப்பே கடுமையான சவாலாக உள்ளது.
தேசிய அளவில் மின்பாதைகள் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இத்திட்டத்தில், கோவை மண்டலத்துக்கு 329 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
விவசாய நிலங்களுக்கு பிரத்யேக மின்பாதை அமைத்தல், இரண்டு மின்மாற்றிகள் உள்ள இடங்களில் ஒன்றை வேறு இடத்துக்கு சிறிய மின்மாற்றிகள் அமைத்தல், சிறிய அளவில் உயர் மின்னழுத்த வினியோக முறை என்ற மூன்று பிரிவுகளின் கீழ், சீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது.
கோவை நகர் பகுதி மேற்பார்வை பொறியாளர் சதீஷ்குமார் கூறுகையில், ''கோவை நகர் பகுதிகளில், மின்விநியோகம் மறுசீரமைப்பு பணிகள் நடக்கின்றன. நகர்ப்பகுதியில் மட்டும், இரண்டு மின்மாற்றிகள் ஒரே இடத்தில் இருப்பதை, வேறு இடங்களுக்கு மாற்றி வைப்பதும், சிறிய அளவில் உயர் மின் வினியோக முறை அமைத்தல் பணிகளுக்கு, 9.84 கோடி ரூபாயில் பணிகள் நடக்கின்றன. நல்லாம் பாளையம், சேரன் நகர் பகுதியில் மின்மாற்றிகள் சார்ந்த பணி முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. மற்ற இடங்களில் நவ., இறுதிக்குள் பணிகள் முடிக்கப்படும்.
புதிதாக 246 டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க உள்ளோம். இத்திட்டம் வாயிலாக, மின் இழப்புகள் பெருமளவில் தடுக்கப்படும்,'' என்றார்.