Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'ஹேண்ட்பால்' போட்டியில் ஜி.கே.டி. பள்ளி முதலிடம்

'ஹேண்ட்பால்' போட்டியில் ஜி.கே.டி. பள்ளி முதலிடம்

'ஹேண்ட்பால்' போட்டியில் ஜி.கே.டி. பள்ளி முதலிடம்

'ஹேண்ட்பால்' போட்டியில் ஜி.கே.டி. பள்ளி முதலிடம்

ADDED : செப் 09, 2025 10:37 PM


Google News
கோவை; மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான 'ஹேண்ட்பால்' போட்டி, கற்பகம் பல்கலை உள்ளிட்ட மைதானங்களில் நடந்தது. பள்ளி மாணவர் பிரிவில், 35 அணிகள், மாணவியர் பிரிவில், 23 அணிகள் பங்கேற்றன.

மாணவியருக்கான முதல் அரையிறுதியில், ஏ.ஆர்.சி. பள்ளி அணியும், நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு பள்ளி அணியும் (என்.எஸ்.என்.) மோதின. இதில், 13-2 என்ற புள்ளிகளில் என்.எஸ்.என்., அணி வெற்றி பெற்றது. இரண்டாம் அரையிறுதியில், ஜி.கே.டி. பள்ளி அணி, 13-4 என்ற புள்ளிகளில் என்.எஸ். மெட்ரிக் பள்ளி அணியை வீழ்த்தியது.

இறுதிப்போட்டியில் என்.எஸ்.என். அணி, 11-3 என்ற புள்ளிகளில் ஜி.கே.டி. பள்ளி அணியை வீழ்த்தி, முதலிடம் பிடித்தது. மூன்று மற்றும் நான்காம் இடத்துக்கான போட்டியில், என்.எஸ் மெட்ரிக் பள்ளி அணியும், ஏ.ஆர்.சி. பள்ளி அணியும் மோதின. இதில், 4-2 என்ற புள்ளிகளில் ஏ.ஆர்.சி. அணி வெற்றி பெற்றது.

மாணவர்களுக்கான முதல் அரையிறுதியில், ஜி.கே.டி. அணி, 10-4 என்ற புள்ளிகளில் என்.எஸ்.என். அணியை வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இரண்டாவது அரையிறுதியில், பயனீர் பள்ளி அணி, 18-9 என்ற புள்ளிகளில் நேஷனல் மாடல் பள்ளி அணியை வென்றது.

இறுதிப்போட்டியில், ஜி.கே.டி. பள்ளி அணி, 22-21 என்ற புள்ளிகளில் பயனீர் பள்ளி அணியை வென்று முதலிடத்தை தட்டியது. என்.எஸ்.என். பள்ளி அணி, 12-9 என்ற புள்ளிகளில் நேஷனல் மாடல் பள்ளி அணியை வென்று மூன்றாம் இடம் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us