/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தேர்ச்சி பெறாதவர்கள் தேர்வெழுத வாய்ப்பு தேர்ச்சி பெறாதவர்கள் தேர்வெழுத வாய்ப்பு
தேர்ச்சி பெறாதவர்கள் தேர்வெழுத வாய்ப்பு
தேர்ச்சி பெறாதவர்கள் தேர்வெழுத வாய்ப்பு
தேர்ச்சி பெறாதவர்கள் தேர்வெழுத வாய்ப்பு
ADDED : செப் 09, 2025 10:38 PM
கோவை; கோவை அரசு கலை கல்லுாரியில், 2017ம் ஆண்டு வரை இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பில் சேர்ந்து, தேர்ச்சி பெறாமல் உள்ள மாணவர்கள், நிலுவைத்தேர்வை எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வரும், அக்., - நவ., மாதங்களில் நடைபெற உள்ள பருவத்தேர்வுகளில், நிலுவைத்தேர்வை எழுதலாம். ஆர்வமுள்ள மாணவர்கள், அரசு கலை கல்லுாரி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்தில் பாட விபரங்களை சமர்ப்பித்து, இன்று முதல் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம்.
அதற்கான தேர்வு கட்டணத்தை, கல்லுாரியில் உள்ள யூகோ வங்கியில் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, 19ம் தேதி அன்றோ, அதற்கு முன்போ நேரில் சமர்ப்பிக்க வேண்டும், என, கல்லுாரி நிர்வாகம் அறிவித்துள்ளது.